இந்த மனுவை நீதிபதிகள் விபின் சங்கி, ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கறிஞர் விராக் குப்தா முன்வைத்துள்ளார்.
இந்த மனுவில், உரிய அனுமதியின்றி அரசியல்வாதிகள் எவ்வாறு மருந்துகளின் பெரிய பங்குகளை வாங்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மனுதாரரான ஹிருதுயா அறக்கட்டளையின் தலைவர் தீபக் சிங், "ஒருவரின் சொந்த அரசியல் லாபத்திற்காக மருந்துகளை அணுக மறுப்பது மிகவும் தீவிரமான குற்றமாகும். இது நாடு முழுவதும் உள்ள கரோனா நோயாளிகளைப் பாதிக்கிறது" என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
அரசியல்வாதிகள் ரெம்டெசிவிர் போன்ற முக்கியமான மருந்துகளைப் பெரிய அளவில் பதுக்கல், இடமாற்றம் செய்தல், விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தீபக் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"அரசியல் கட்சிகள், பெரும்பாலானவை டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளன, அவற்றின் அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி, மருத்துவ மாஃபியாக்களுக்கு ஆதரவளிக்கின்றன" என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு ரெம்டெசிவிர் போன்ற அவசர கால மருந்துகளைப் பதுக்குபவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மேலும் அவர்கள் மீீது, தேசிய பாதுகாப்புச் சட்டம், 1980இன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தால் அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.