டெல்லி : பாலியல் வன்புணர்வு படுகொலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படங்களை பகிர்ந்த ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகரந்த் சுரேஷ் மகாதேல்கர் (Makrand Suresh Mhadelkar) என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், “பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவர்களின் பெற்றோர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது சிறார் நீதிச் சட்டம், போக்சோ உள்ளிட்ட சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
டெல்லி தலித் சிறுமி வன்புணர்வு கொலை- நியாயமான விசாரணை தேவை- பாஜக!
இந்தச் சட்டப்பிரிவுகளின் கீழ் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கலாம். இந்நிலையில் டெல்லி பாலியல் வன்புணர்வு கொலையுண்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த (ஆக) 1ஆம் தேதி 9 வயதான பட்டியலின சிறுமி ஒருவர் பாலியல் வதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக மதகுருமார் ஒருவர் உள்பட 4 பேர் மீது காவலர்கள் போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : பாலியல் வன்புணர்வின் மையப்புள்ளி டெல்லி - காங்கிரஸ்