புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷை(25) சேற்றில் அழுத்தி அவரது தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற கும்பலைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் பாண்லே பூத் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த பிரகாஷுக்கும் சிலருக்கும் முன் விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (நவ.18) இரவு 12 மணியளவில் பிரகாஷ் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, சபரி, எலி கார்த்திக், டெம்போ ராஜா மார்த்தான் உள்பட 4 பேர் பைக்கில் அங்கு வந்தனர்.
பிரகாஷை அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக பைக்கில் பொறையூர் கொண்டு சென்றனர். அங்கு பிரகாஷை சேற்று குட்டைக்குள் வைத்து அழுத்தி, அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.
அவர் உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையறிந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர் அங்கு சென்று உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்
இதையும் படிங்க:‘பார்த் நெட் திட்டம்’ - நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை!