ETV Bharat / bharat

ராகுல் காந்திக்கு எதிராக லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு - ராகுல் காந்தியின் சாவர்க்கர் கருத்து

தேசிய வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் நரேந்திர பாண்டே, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராகுல் காந்திக்கு எதிராக லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு

author img

By

Published : Dec 6, 2022, 5:12 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் எம்பி-எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் சாவர்க்கர் கருத்துக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய காவல் நிலையத்துக்கு உத்தரவிடக் கோரி தேசிய வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் நரேந்திர பாண்டே வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையம் தரப்பில் பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 8ஆம் தேதி மீண்டும் நடக்கிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நவம்பர் 15ஆம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டிருந்தார்.

இதனிடையே முண்டா பழங்குடியினத்தைச் சேர்ந்த போராளியான பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுகூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சாவர்க்கரின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தார். இந்த கருத்து சாவர்க்கரை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது. இதையடுத்து மும்பையில் ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: பஞ்சாப் எல்லையில் குவியும் பாகிஸ்தான் ஹெராயின் டிரோன்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.