ETV Bharat / bharat

புதுச்சேரியில் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி - புதுச்சேரியில் திரையரங்கில் 100 சதவீத

புதுச்சேரியில் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதியளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி

author img

By

Published : Oct 31, 2021, 1:13 PM IST

Updated : Oct 31, 2021, 3:21 PM IST

புதுச்சேரி : கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வந்தது. கடந்த முறை அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்த நிலையில் கடைகள், வணிக நிறுவன ஊழியர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கடற்கரை சாலை, பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் அனைத்தும் அனைத்து நாள்களும் வழக்கமான நேரங்களில் முழுமையாக திறந்திருக்கலாம்.அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் உள்ளிட்ட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு இன்று முடிவடையவுள்ள நிலையில் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு நேர ஊரடங்கு இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை அமலில் இருக்கும், இருப்பினும் பண்டிகை சார்ந்த விற்பனைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி
புதுச்சேரி

கோயில்களில் திருவிழாக்கள், சூரசம்ஹாரம் உள்ளிட்டவை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் வழிமுறைகளைப் பின்பற்றி திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் 50சதவீதம் பார்வையாளர்களாக அனுமதி இருந்தது நாளை முதல் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுடன் கரோனா விதிமுறைகள் கடைபிடித்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரஜினிகாந்த் உடல்நிலை: நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர்!

Last Updated : Oct 31, 2021, 3:21 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.