திருவனந்தபுரம்: கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது.
மக்களின் வெற்றி
இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "இது மக்களின் வெற்றி. காங்கிரஸ் பல இடங்களில் தன்னுடைய செல்வாக்கை இழந்து, தோல்வியைத் தழுவியுள்ளது.
கேரளாவின் சாதனைகளை இழிவுபடுத்துவதற்காக பொய்யான பரப்புரைகள் செய்தவர்களுக்கு இதுவே பதில். மாநிலத்தில் தனக்கு ஒரு மதச்சார்பற்ற மனப்பான்மை இருப்பதை கேரள மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். இந்த முடிவுகள் இடதுசாரிகளுக்கான அடித்தளம் வலுவடைந்துள்ளதைக் காட்டுகிறது.
ஊடகங்கள் கருத்துகளை மறுபரிசீலனை செய்க
தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது பாஜகவின் பொய்யான கூற்றுகள் அனைத்தும் நொறுங்கிவிட்டன. தேர்தலுக்கு சற்று முன்னர் அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான பர்பபுரைகள் நடந்தன. சில ஊடகங்கள்கூட பொய்களை பரப்புவதிலும், தவறான பரப்புரைகளிலும் தங்களை இணைத்திருந்தன். இருப்பினும், இதுபோன்ற எந்தவொரு முயற்சியிலும் மக்கள் கவனம் செலுத்தவில்லை.
பலர் தங்கள் சொந்த விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப கதைகளை புனைகின்றனர். மக்கள் முன் வைத்த தவறான பரப்புரைகளை ஊடகங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இடதுசாரிகள் மேல் நம்பிக்கை கொண்டுள்ள மக்கள்
இந்த வெற்றி என்பது மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட முன்னேற்றங்களுக்கான ஆதரவாக உள்ளது. இடதுசாரிகளை இழிவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் இருந்தபோதிலும், தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக கேரள மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது"என்ரார்
இதையும் படிங்க: தேர்தல் விதிமீறல் புகார்: முதலமைச்சரிடம் விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்!