ETV Bharat / bharat

ஸ்புட்னிக் வி பூஸ்டர் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - குழப்பத்தில் மக்கள் - சோனார்பூரில் வசிக்கும் ஷாமிக் கோஷ்

கரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் வி எடுத்துக்கொண்டவர்கள் அதற்கான பூஸ்டர் தடுப்பூசி இல்லாததால் குழப்பத்தில் உள்ளனர்.

Etv Bharatஸ்புட்னிக் வி பூஸ்டர்  தடுப்பூசிக்கு தட்டுபாடு - குழப்பத்தில் மக்கள்

author img

By

Published : Aug 30, 2022, 4:10 PM IST

கொல்கத்தா: கரோனாவால் பாதிப்படைவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தாலும் தற்போது அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள அரசு வலியுறுத்திவருகிறது. கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு தற்போது அரசு மருத்துவமனைகளில் அட்டவணைப்படி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஸ்புட்னிக் வி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில், தற்போது மத்திய அரசு மாற்று தடுப்பூசி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இது ஸ்புட்னிக் வி தடுப்பூசி போட்டவர்களை ஒரு நிர்பந்தத்தில் தள்ளியுள்ளது. ஸ்புட்னிக் வி போட்டவர்களுக்கு மாற்றாக கோவிஷில்டு அல்லது கோவாக்சினின் பூஸ்டர் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை வழங்கவில்லை.

ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்திய சந்தையில் தட்டுப்பாடு நிலை வருகிறது. ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கான பூஸ்டர் டோஸ்கள் கிடைக்காததால், ஸ்புட்னிக் வி எடுத்துக்கொண்டவர்களுக்கு சிரமம் ஏற்படட்டுள்ளது. இது குறித்து சோனார்பூரில் வசிக்கும் ஷாமிக் கோஷ் கூறுகையில், "கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனியார் மருத்துவமனையில் இரண்டு டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இப்போது பூஸ்டருக்கான நேரம்.

ஆனால், பூஸ்டர் தடுப்பூசி எங்கும் கிடைக்கவில்லை, அதனால் பூஸ்டர் எடுத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது மாற்று தடுப்பூசி பற்றி கேள்விப்பட்டேன். ஆனால், இதனால் பின்னர் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது" எனத் தெரிவித்துள்ளார்.

மக்களிடையே மாற்று தடுப்பூசி குறித்து ஐயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பல ஆய்வுகள் மாற்று தடுப்பூசியின் நன்மைகளைக் குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. மறுபுறம், ஒரு மாற்று தடுப்பூசி இருந்தால், மனித உடல் அதன் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது.

இந்த மாற்று தடுப்பூசி குறித்து தடுப்பூசி சோதனை ஆய்வாளர் சினேந்து கோனர் கூறுகையில், "ஸ்புட்னிக் மருந்தின் முதல் டோஸ் பூஸ்டர் டோஸாக வழங்கப்பட்டது. ஆனால், தற்போது சந்தையில் அது கிடைக்கவில்லை. மாற்று தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு நல்ல முடிவை எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் வெளிநாடுகளில் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இது நல்ல பலனைத் தந்துள்ளது. நாங்கள் இந்தியாவிலும் இதைப் பரிசோதித்துள்ளோம். ஆனால் இதைப் பற்றி மேலும் சோதனைகள் தேவை" எனக் கூறினார்.

இதையும் படிங்க:ஓசூரில் நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்ட கூகுள் மேப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.