பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக எட்டு பேர் கொண்ட விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் இன்று (அக்.27) நியமித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாங்கள் பெகாசஸ் விவகாரத்தை தீவிரமாக எழுப்பினோம். நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பின் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நாங்கள் உணர்ந்தோம். பெசகாஸ் மூலம் ஜனநாயகத்தை நசுக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
எங்களின் இதே எண்ணங்களைத் தான் உச்ச நீதிமன்றமும் இன்று தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு என்பது மிக முக்கிய நடவடிக்கை. நீதி நிச்சயம் காக்கப்படும் என நம்புகிறோம்.
நீதிமன்றத்தின் நடவடிக்கை மகிழ்ச்சி தருகிறது. இந்த விவகாரத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ளோம். பாஜகவுக்கு அது பிடிக்காது என்பது தெரியும். இருப்பினும் மீண்டும் குரல் கொடுப்போம்.
பெகாசஸுக்கு பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர்தான் உத்தரவு அளித்திருக்க வேண்டும். பெகாசஸ் சட்டவிரோத நடவடிக்கை. இதுபோன்ற நடவடிக்கையை பிரதமர் ஏன் மேற்கொண்டார். நாட்டை விட பிரதமர் மேலானவர் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரத்தில் 3 நபர் விசாரணை குழு அமைப்பு!