மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகதி கூட்டணி அரசு நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மகாராஷ்டிரா அரசின் உள்துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனில் தேஷ்முக் உள்ளார். இவர் மீது இப்போது மாபெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்பீர் சிங் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எட்டு பக்க கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில், மாதந்த்தோறும் தன்னை நூறு கோடி ரூபாய் வசூல் செய்து தன்னிடம் கொடுக்கும்படி உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வற்பறுத்தியதாகவும், தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என உள்துறை அமைச்சர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தச் சிக்கலான அரசியல் சூழல் குறித்து விவாதிக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது கட்சி உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். அதில் துணை முதலமைச்சர் அஜித் பவார், மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அயோத்தியில் கூடுதலாக 37 ஏக்கர் இடம் வாங்கிய ராமர் கோயில் அறக்கட்டளை