பிகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுன்னு குமார்(40), ரத்தக்கசிவு பிரச்னை காரணமாக மூளை கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் கரோனா தொற்று பாதிப்பில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இறப்பு சான்றிதழும் குடும்பத்தினரிடம் வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து, அவரது உடல் இறுதிச்சடங்கு நடத்துதற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதியாக, அவரது முகத்தை ஒருமுறை பார்க்கலாம் எனக் குடும்பத்தினர் துணியை நகர்த்தியுள்ளனர். அப்போது, அது வேறு ஒரு நபரின் உடல் எனத் தெரியவந்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போதுதான், சுன்னு குமார் இன்னமும் மருத்துவமனையில் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு பதிலாக, வேறு ஒரு நபரின் உடலை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, சுன்னுவின் உறவினர்கள் மருத்துவமனையின் அலட்சியத்தை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். அப்போது பேசிய சுன்னுவின் மனைவி கவிதா, "எனது முழு குடும்பத்திற்கு, கரோனா தொற்று சோதனையில் நெகட்டிவ் ரிசலட் வந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக, அவருக்கு கால் எழும்பில் அடிப்பட்டு படுக்கையிலேதான் உள்ளார்.
அப்படி இருக்கையில் எப்படி கரோனா தொற்று ஏற்பட்டிருக்கும். மருத்துவமனை அலட்சியமாக செயல்படுகிறது. பணத்தின் மீதுதான் அவர்களுக்கு குறிக்கோள். அவர் இறந்துவிட்டதாக அறிவித்தபோது, உடலை மயானத்திற்கு கொண்டு செல்லவே ஆயிரத்து 500 ரூபாய் கேட்டனர்" எனத் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். ஐஎஸ் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மூவர் போக்சோவில் கைது