ETV Bharat / bharat

தனியார் மருத்துவமனையின் மாடியிலிருந்து விழுந்து நோயாளி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம் - patient dies after falling from floor

புதுச்சேரி: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி நான்காவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்
author img

By

Published : Jan 8, 2021, 6:10 AM IST

புதுச்சேரி கணபதிசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ருத்ர குமார்(45) கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் மருத்துவமனையின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை அலுவலர்களை சந்தித்து விளக்கம் கேட்டனர். அதற்கு அலுவலர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மக்கள் நலப் பணியாளர்கள் ரத்தம் விற்கும் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.