ETV Bharat / bharat

நடுவானத்தில் தீ - செல்ஃபோன் செய்த சம்பவம்; பயணிகளின் நிலை? - No one was injured

இண்டிகோ நிறுவனத்தின் விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, அதிலிருந்த பயணி ஒருவரின் செல்ஃபோனில் இருந்து தீ கிளம்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானத்தில் தீ
நடுவானத்தில் தீ
author img

By

Published : Apr 15, 2022, 8:16 AM IST

Updated : Apr 15, 2022, 9:46 AM IST

டெல்லி: அசாமின் திப்ருகர் நகரிலிருந்து தலைநகர் டெல்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் அதிர்ச்சிக்கரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த விமானம் நேற்று (ஏப். 14) நடுவானில் சென்றுகொண்டிருந்த போது, பயணி ஒருவரின் செல்ஃபோனில் தீப்பற்றியுள்ளது.

இதையடுத்து, விமான பயணியாளர்கள் உடனடியாக அந்த தீயை, தீ அணைப்பான் மூலம் அணைத்துவிட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இயக்குநரக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பாக தரையிறங்கியது: 6E 2037 என்ற அந்த விமானத்தில், பயணி ஒருவரின் செல்ஃபோனில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு புகை கிளம்புவதை அங்கிருந்த விமானப் பணியாளர் கவனித்துள்ளார் எனவும், உடனே அவர் அதனை தீ அணைப்பான் மூலம் அணைத்துவிட்டதாகவும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த விமானம் எவ்வித பிரச்சனையும் இன்றி நேற்று மதியம் 12.45 அளவில் டெல்லியில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், திருப்கர் - டெல்லி சென்ற விமானப் பயணியின் செல்ஃபோனில் இருந்து தீ கிளம்பிய நிலையில், அங்கிருந்த பணியாளர் விரைவாக செயல்பட்டு நிலைமையை சீராக்கியுள்ளார் என்றும் அங்கிருந்தவர்களுக்கோ அல்லது பொருள்களுக்கோ எந்த சேதமும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருப்பதியில் கூட்ட நெரிசல்; இலவச தரிசனம் செய்ய 40 மணிநேரமாக பக்தர்கள் காத்திருப்பு!

Last Updated : Apr 15, 2022, 9:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.