புடாபெஸ்ட் : உலக தடகள சாம்பியன்ஷிப் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஷ் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி, தேசிய சாதனையை முறியடித்தார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஷ் தடை ஓட்டம் நடைபெற்றது. மினி மாரத்தான் போல் இந்த போட்டி காணப்பட்டாலும், ஓட்டத்தின் போது ஆங்காங்கே இடர்கள் வைக்கப்பட்டு இருக்கும் என்பதால் இந்த போட்டிக்கு ஸ்டீபில்சேஷ் என பெயரிடப்பட்டு உள்ளது.
மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஷ் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி கலந்து கொண்டார். 3 ஆயிரம் மீட்டர் தடை ஓட்டத்தை பருல் சவுத்ரி 9 நிமிடம் 15 புள்ளி 51 விநாடிகளில் நிறைவு செய்து 11வது நபராக எல்லைக் கோட்டை தாண்டினார். போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும், தேசிய அளவிலான சாதனையை முறியடித்து பருல் சவுத்ரி புது மைல்கல் படைத்து உள்ளார்.
-
.@WinfredYavi becomes the first athlete from Bahrain to win the 3000m steeplechase at the #WorldAthleticsChamps
— World Athletics (@WorldAthletics) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
World lead as the cherry on top 🍒 pic.twitter.com/AJTGsTSY6u
">.@WinfredYavi becomes the first athlete from Bahrain to win the 3000m steeplechase at the #WorldAthleticsChamps
— World Athletics (@WorldAthletics) August 27, 2023
World lead as the cherry on top 🍒 pic.twitter.com/AJTGsTSY6u.@WinfredYavi becomes the first athlete from Bahrain to win the 3000m steeplechase at the #WorldAthleticsChamps
— World Athletics (@WorldAthletics) August 27, 2023
World lead as the cherry on top 🍒 pic.twitter.com/AJTGsTSY6u
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த லலிதா பாபர் என்பவர் இதற்கு இதே பிரிவில் 9 நிமிடம் 19 புள்ளி 76 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பருல் சவுத்ரி முறியடித்து புதிய தேசிய சாதனையை படைத்து உள்ளார். அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பருல் சவுத்ரி தகுதி பெற்றார். பஹ்ரைன் வீராங்கனை வின்பிரட் யாவி 3 ஆயிரம் மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.
அதேபோல் ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 5வது இடத்தை பிடித்தது. 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் ஹீட்ஸ் சுற்றில் ஆசிய சாதனையை முறியடித்த இந்திய வீரர்கள் முகமது அனஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் மற்றும் ராஜேஷ் ரமேஷ் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.
-
USA all the way 😮💨@_Kingben_ brings the 🇺🇸's men's 4x400m squad home 👏#WorldAthleticsChamps pic.twitter.com/Zhx1nuyLRB
— World Athletics (@WorldAthletics) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">USA all the way 😮💨@_Kingben_ brings the 🇺🇸's men's 4x400m squad home 👏#WorldAthleticsChamps pic.twitter.com/Zhx1nuyLRB
— World Athletics (@WorldAthletics) August 27, 2023USA all the way 😮💨@_Kingben_ brings the 🇺🇸's men's 4x400m squad home 👏#WorldAthleticsChamps pic.twitter.com/Zhx1nuyLRB
— World Athletics (@WorldAthletics) August 27, 2023
விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி, 2 நிமிடம் 59 புள்ளி 92 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 5வது இடத்தை பிடித்தனர். ஆசிய சாதனையை முறியடித்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் மனம் தளராது 5வது இடத்திற்கு முன்னேறினர். இதில் இந்திய அணியில் இடம் பெற்ற ராஜேஷ் ரமேஷ் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவின் குயின்சி ஹால், வெர்னன் நார்வுட், ஜஸ்டின் ராபின்சன், ராய் பெஞ்சமின் அணி பந்தய தூரத்தை 2 நிமிடம் 57 புள்ளீ 31 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. பிரான்ஸ் அணி வெள்ளிப் பதக்கமும், கிரேட் பிரிட்டன் (இங்கிலாந்து) வெண்கலமும் வென்றது.
இதையும் படிங்க : Neeraj Chopra : ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம்.. 40 ஆண்டுகால சாதனை முறியடிப்பு!