ETV Bharat / bharat

"நாடாளுமன்றம் பாதுகாப்பாக இல்லை" - பாஸ் வழங்கிய பாஜக எம்.பியை விசாரிக்க வலியுறுத்தல்! - நாடாளுமன்றத்தில் ஊடுருவல்

parliament security breach: நாடாளுமன்றத்தில் பாதுகாப்புகளை மீறு இருவர் அவைக்குள் நுழைந்து புகைக்குண்டுகளை வீசிய விவகாரத்தில், பாஸ் வழங்கிய பாஜக எம்.பி.யை விசாரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

parliament security breach mps reaction slam narendra modi bjp government
பாஸ் வழங்கிய பாஜக எம்.பியை விசாரிக்க வலியுறுத்தல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 8:12 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 10ஆவது நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் அவைக்குள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் குதித்தனர். அந்த நபர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிடிக்க முயன்ற போது அவர்கள் மஞ்சள் நிறத்திலான புகையை தாங்கள் வைத்திருந்த குப்பியில் இருந்து வெளியேற்றினர்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அவைக்குள் புகுந்து இரு நபர்கள் வாயு வெளியேற்றியதால் ஏற்பட்ட பதற்றத்தால் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த நபர்கள் வெளியேற்றிய புகை நச்சு புகையாக இருக்குமோ என்ற அச்சமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்தது.

இதனையடுத்து அவை மீண்டும் கூடியபோது, இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது எனவும், வெளியேறியது சாதாரண வாயு என்பதால் பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை எனவும் விளக்கம் அளித்தார். நாடாளுமன்றத்தில் நடந்த இந்த அத்துமீறல் சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அதே நாளில் 22 ஆண்டுகளுக்கு பின்னர் இதுபோன்றதொரு சம்பவம் நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், திரிமுணால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜி, பாஜக எம்.பியை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய கல்யாண் பானர்ஜி, “இது பெரிய பாதுகாப்பு குறைபாடு. நரேந்திர மோடி அரசாங்கத்தில் எம்.பிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்பு முழு தோல்வி அடைந்திருப்பதை இன்றைய சம்பவம் காட்டுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பார்வையாளர் சீட்டு (Visitor Pass) வழங்கிய பாஜக எம்.பி.யைக் காவலில் வைத்து விசாரிகக் வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அவைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் சாகர் சர்மாவிடம் இந்த பார்வையாளர் சீட்டை போலீசார் பரிசோதித்த போது அது, மைசூரு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவால் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து காங்கிரச் எம்.பி, அப்துல் காலெக் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், “22 ஆண்டுகளுக்கு முன்னார் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. 22 ஆண்களுக்கு பின்னரும் நாடாளுமன்றம் தாக்கப்பட்டுள்ளது நமது பாதுகாப்பு அமைப்பின் மிகப்பெரிய தோல்வி ஆகும்.

இதுபோன்ற சம்பவத்திற்கு காரணம் யார் என தீவிரமாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பார்வையாளர் சீட்டு வழங்கிய பாஜக எம்பி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து யார் வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தில் குதிக்கலாம். பார்வையாளர் மாடம் சரியான முறையில் கட்டப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடந்த இந்த அத்துமீறல் சம்பவத்திற்கு பின்னர் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, டெல்லி போலீஸ் கமிஷனர், சிஆர்பிஎஃப் டிஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனையடுத்து என்ஐஏ, சிஆர்பிஃஎப், என்டிஆர்ஃஎப், டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உள்ளிட்டோர் தனித்தனியாக விசாரணையைத் துவங்கினர்.

என்சிஆர்ஃஎப்-இன் மூத்த அதிகாரி பிகே திவாரி, குற்றம்சாட்டப்பட்டவர் புகையத் தெளித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அதுகுறித்து எங்களது குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார். பாதுகாப்பு நிறைந்த நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தை கண்டிக்கிறேன்.. ஆனால் என் மகன் நல்லவன்..! அத்துமீறி நுழைந்தவரின் தந்தை பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.