ETV Bharat / bharat

நாடாளுமன்றம் பாதுகாப்பு குளறுபடி : 5வது நபர் கைது! போலீசார் கூறிய திடுக் தகவல்!

Parliament security breach: நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியில் தொடர்புடைய 5வது நபரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 6:09 PM IST

டெல்லி : நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில், நேற்று (டிச. 13) 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவையின் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த இரண்டு பேர் மக்களவை எம்.பிக்கள் இருப்பிடத்திற்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்டனர்.

இருவரையும் பிடித்து மக்களவை உறுப்பினர்கள் அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதேபோல் நாடளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைகளை வீசி பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்திய பெண் உள்பட 2 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த டெல்லி போலீசார் 4 பேர் கைது செய்து, தலைமறைவான இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்திற்குள் களேபரத்தில் ஈடுபட்டவர்கள் சாகர் சர்மா, மனோரஞ்சன் என்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமோல் ஷிண்டே மற்றும் நீலம் தேவி என அடையாளம் காணப்பட்டது. இந்த விவகாரத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தலைமறைவான இரண்டு பேரை தேடி வருவதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாதுகாப்பு குளறுபடியில் ஈடுபட்ட 5வது நபர் பிடிபட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர். அவர் விஷால் என்றும் 4 பேருக்கு அடைக்கலம் கொடுத்த நபர் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் தலைமறைவான லலித் என்பவரை தேடி வருவதாகவும் விரைவில் அவரையும் கைது செய்ய உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியில் ஈடுபட்டவர்களை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், மக்களவை செயலரின் கோரிக்கையை ஏற்று சிஆர்பிஎப், டி.ஜி அனிஷ் தயால் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

கைது செய்யப்பட்ட 5 பேர் உள்பட 6 பேரும், வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், இந்த சம்பவம் அவர்களது பெற்றோர்களுக்கு கூட தெரிந்து இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட விசாரணையில், விவசாயிகள் போராட்டம், மணிப்பூர் விவகாரம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் தாங்கள் அதிருப்தியில் இருந்ததாக கைது செய்யப்பட்ட அமோல் ஷிண்டே தெரிவித்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : எம்.பிக்கள் சஸ்பெண்ட்... எப்படி ஜனநாயகம்? - கனிமொழி எம்.பி. கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.