ETV Bharat / bharat

டெல்லியில் தொலைந்த சிறுமி, அபுதாபியில் 3 பதக்கம் வென்றார்!

author img

By

Published : Apr 26, 2022, 7:32 PM IST

டெல்லியில் தொலைந்துப்போன இளம்பெண் ஒருவர் வளைகுடா நாடான அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Smita Lohra
Smita Lohra

லதேஹர் (ஜார்க்கண்ட்) : வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் 2019ஆம் ஆண்டுக்கான சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளில் பவர் லிஃப்டிங்கிற்காக மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றவர் பாராலிம்பிக் விளையாட்டு வீராங்கனை ஸ்மிதா லோஹ்ரா. இவரின் வெற்றிக்குப் பின்னால் ஊக்கமளிக்கும் கதை ஒன்றும் உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள லதேஹர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்மிதா லோஹ்ரா. ஸ்மிதா சிறு வயதாக இருக்கும் போது அவரை வீட்டு வேலைகள் செய்யும் பணிப்பெண்ணாக அவரது தந்தை மற்ற தொழிலாளர்களுடன் டெல்லிக்கு அனுப்பிவைத்தார்.

டெல்லியில் தொலைந்த சிறுமி, அபுதாபியில் 3 பதக்கம் வென்றார்!

இந்த நிலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஸ்மிதாவுக்கு அவரது வீட்டாருடன் எந்தத் தொடர்பும் இல்லை. இதற்கிடையில் ஒருநாள் டெல்லியில் தொலைந்துப் போனாள். அவள் எங்கிருந்து வந்தாள், இங்கு எப்படி சிக்கினாள் என்பது குறித்து அவளால் எதுவும் தெரிவிக்க முடியவில்லை.

ஏனெனில் அவளால் சரியாக பேச முடியாது. இந்நிலையில் உள்ளூர்வாசி ஒருவர் ஸ்மிதாவை சிறப்பு மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடம் கொண்டு சேர்த்தார். அங்கு அவள் சுறுசுறுப்பாக இருப்பதை பார்த்தனர். மேலும் அவர் பவர் லிஃப்டிங்கில் தனித்திறமையுடன் விளங்குகிறாள் என்பதையும் கவனித்தனர்.

Paralympic bronze medalist reunites with family after 10 years in Jharkhand
பாராலிம்பிக் விளையாட்டு வீராங்கனை ஸ்மிதா லோஹ்ரா

கனமான பொருள்களையும் அசால்ட் ஆக தூக்கினார். இதையடுத்து அவளுக்கு பவர் லிஃப்டிங் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அபுதாபியில் 2019ஆம் ஆண்டுக்கான சிறப்பு ஒலிம்பிக் பவர் லிஃப்டிங் போட்டியில் 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளார். இதற்கிடையில், ஸ்மிதா லோஹ்ராவுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் இமயமலையில் ஏறி சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.