நாட்டில் கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட பொது முடக்கம் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
பல தொழிலாளர்கள் தங்களின் வருங்கால வைப்புத்தொகை கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டது தொழிலாளர் அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரியவந்தது.
அத்துடன் பல தொழிலாளர்கள் முற்றாக வேலையிழந்ததாகவும் பல ஆய்வுத்தகவல்கள் தெரிவித்துவருகின்றன.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, நிலையான சம்பளம் பெரும் பாதிக்கும் மேற்பட்ட மாதச் சம்பளதாரர்கள் பாதி பேர் அமைப்புசாரா தொழிலாளராக மாறியுள்ளது தெரிவந்துள்ளது.
இந்நிலையில், கோவிட்-19 காரணமாக தொழிலாளர்கள் சந்தித்துள்ள வருவாய் இழப்பு, வேலையிழப்பு குறித்து விரிவான ஆய்வறிக்கையை ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் தயார் செய்து சமர்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் புள்ளிவிவரத்தை கணக்கிட்டுச் சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு தொழிலாளர் அமைச்சகத்திற்கு வழிகாட்டுதல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: முதல் புத்தகத்தை வெளியிட்ட இந்தோ-திபெத் எல்லைப் படை