இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயதை உயர்த்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்துவருகிறது. கடந்த சுதந்திர தின விழாவின் போது இதை பிரதமர் நரேந்திர மோடியும் குறிப்பிட்டு பேசினார். பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க குழு ஒன்றை அரசு நியமித்துள்ளது. மேலும், இந்த குழுவின் அறிக்கையை பரிசீலித்த பின்னர், மத்திய அரசு முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஜெயா ஜெய்ட்லி தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழு, இதுகுறித்த விரிவான அறிக்கையை பிரதமர் அலுவலகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது. இதில் பரிந்துரைகள் அவற்றை அமல்படுத்தவதற்கான வழிமுறைகளை நிபுணர் குழு விரிவாக தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை தொடர்பான முடிவை விரைவில் எடுக்கும் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18ஆக உள்ள நிலையில், அதை 21ஆக உயர்த்தும் திட்டம் அரசுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இளம் வயதில் பெண்களுக்கு நடக்கும் திருமணம், மகப்பேறு போன்றவற்றை குறைக்கவே அரசு இந்நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் திமுக, மேற்குவங்கத்தில் மம்தா... நெருங்கும் தேர்தல்: கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?