ETV Bharat / bharat

காஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் தாக்குதல்: இடம்பெயரும் பண்டிட் சமூக மக்கள்!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காஷ்மீரில்  புலம்பெயர் தொழிலாளர் சுட்டுக்கொலை

author img

By

Published : Jun 3, 2022, 10:43 PM IST

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

கடந்த மே 31ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியை சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து நேற்று பயங்கரவாதிகள் குல்காம் மாவட்டம் மோகன்போராவில் உள்ள வங்கியில் புகுந்து மேலாளர் விஜயகுமார் என்பவரை சுட்டுக் கொன்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று இரவு (ஜூன் 3) சதூரா பகுதியில் உள்ள செங்கல் சூளையில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் தில்குஷ் உயிரிந்தார். மற்றொரு தொழிலாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர் சுட்டுக்கொலை

பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காஷ்மீர் பண்டிட்டுகள் ஜம்முவிற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்தநிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: ஜம்மூ-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு- வங்கி மேலாளர் சுட்டுக் கொலை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.