இந்தியாவின் ’பனேஷியா பயோடெக்’ நிறுவனம் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக, ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனம் (RDIF) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”RDIF மற்றும் பனேஷியா பயோடெக் அமைப்புடன் இணைந்து, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடங்கியுள்ளது.
உலகின் முன்னணி தடுப்பூசி உற்பத்தியாளரான இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இந்த உற்பத்தி, உலக நாடுகளில் பெருந்தொற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முக்கியப் பங்காற்றும்” எனத் தெரிவித்துள்ளது.
-
BREAKING: RDIF and Panacea Biotec launch the production of Sputnik V in India. #India's @PanaceaBiotec now to produce 100 million doses of #SputnikV per year
— Sputnik V (@sputnikvaccine) May 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
👇https://t.co/zgd0WYNxkV pic.twitter.com/ZNeU4Aqi46
">BREAKING: RDIF and Panacea Biotec launch the production of Sputnik V in India. #India's @PanaceaBiotec now to produce 100 million doses of #SputnikV per year
— Sputnik V (@sputnikvaccine) May 24, 2021
👇https://t.co/zgd0WYNxkV pic.twitter.com/ZNeU4Aqi46BREAKING: RDIF and Panacea Biotec launch the production of Sputnik V in India. #India's @PanaceaBiotec now to produce 100 million doses of #SputnikV per year
— Sputnik V (@sputnikvaccine) May 24, 2021
👇https://t.co/zgd0WYNxkV pic.twitter.com/ZNeU4Aqi46
மற்றொரு முன்னணி நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி உற்பத்தியை வரும் ஜூலை மாதத்தில் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.
இதையும் படிங்க: கறுப்பு, வெள்ளையைத் தொடர்ந்து ‘மஞ்சள் பூஞ்சை’ : அதிர்ச்சியில் மருத்துவ உலகம்!