ETV Bharat / bharat

எல்லையில் ஊடுருவ முயற்சி ஒருவர் சுட்டுக்கொலை; மற்றொருவர் கைது - சர்வதேச எல்லை

ஜம்முவின் அர்னியா செக்டார் மற்றும் சம்பா மாவட்டத்தில் ராம்கர் செக்டாரில் அதிகாலையில் ஊடுருவ முயன்றவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு சம்பவத்தில், ராம்கர் செக்டரில் உள்ள எல்லையைக் கடந்து ஃபென்சிங் அருகே வந்த பாகிஸ்தான் ஊடுருவல்காரரை எல்லை பாதுகாப்பு படை கைது செய்தது.

எல்லையில் ஊடுருவி வந்த பாகிஸ்தான் நபர் சுடப்பட்டார்; மற்றொருவர் கைது

author img

By

Published : Nov 22, 2022, 9:49 AM IST

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையில் (IB) இருந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ஊடுருவல்காரர் ஒருவர் எல்லை பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஜம்முவின் அர்னியா செக்டார் மற்றும் சம்பா மாவட்டத்தில் உள்ள ராம்கர் செக்டார் ஆகிய இடங்களில் அதிகாலையில் நடந்த ஊடுருவல் முயற்சிகளை முறியடித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அர்னியா செக்டரில் எல்லை வேலியை நோக்கி வந்த் பாகிஸ்தான் ஊடுருவல்காரர் மீது பிஎஸ்எஃப் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். "அவரை நிற்குமாறு வீரர்கள் கூறியும் அவர் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் வீரர்கள் அவரை சுட வேண்டியதாகி விட்டது," என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மற்றொரு சம்பவத்தில், ராம்கர் செக்டரில் உள்ள சர்வதேச எல்லையைக் கடந்து, ஃபென்சிங் அருகே வந்த ஒரு பாகிஸ்தான் ஊடுருவும் நபரை வீரர்கள் கைது செய்ததாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

"அவர் எல்லை வாயிலைத் திறந்த பிறகு இந்தியப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டார். இதுவரை அவரிடமிருந்து வேறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை," என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும் இரு பிரிவுகளிலும் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இதையும் படிங்க: வங்கிக்கு கொண்டு சென்ற ரூ. 1 கோடி கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.