ETV Bharat / bharat

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு - இம்ரான்கானின் நிலைப்பாடு என்ன? - இம்ரான்கானின் நிலைப்பாடு என்ன

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாகிஸ்தானின் அதிபர் ஆரிப் அல்வி ரத்துசெய்து உத்தரவிட்டார். மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு - இம்ரான்கானின் நிலைப்பாடு என்ன?

author img

By

Published : Apr 3, 2022, 10:31 PM IST

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்றம் முதல் முறையாக கலைக்கப்பட்டு, மறுதேர்தல் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஒரு மாதமாக மிகவும் சிக்கலான அரசியல் சூழல் உருவாகி உள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு பிரதமர் இம்ரான் கானுக்கு சில கட்சிகள் ஆதரவு அளிப்பதை நிறுத்தின. இதன் தொடர்ச்சியாக இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையிலான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து இம்ரான் கானின் ஆதரவு அமைச்சர்கள் உள்பட 50 பேர் மாயமாகினர். இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில் பாகிஸ்தானின் அதிபர் ஆரிப் அல்வி இந்தத் தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் நாடாளுமன்றத்தை கலைப்பதாக தெரிவித்தார். பாகிஸ்தான் மக்களிடம் தொலைகாட்சி வழியாக பேசிய இம்ரான்கான், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அமெரிக்கா மற்றும் சில எதிர் கட்சிகளின் கூட்டுச்சதியாகும்.

அமெரிக்க அரசுக்கு எதிரான கருத்துக்களால் தான் இத்தகைய விளைவுகள் உண்டாகியது. இந்தத் தீர்ப்பு ஜனநாயக முறையில் மக்களால் எடுக்கப்பட வேண்டும். தேர்தல் நடத்த அதிபரிடம் பரிந்துரைத்துள்ளேன் எனக் கூறினார். இதனையடுத்து அங்கு மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெறும் என அதிபர் ஆரிப் அல்வி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மகிந்த ராஜபக்சே ராஜினாமா மறுப்பு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.