சம்பா (ஜம்மு காஷ்மீர்): ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள ராம்கார்க் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாடு கோட்டை கடக்க முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஊடுருவல்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 16) மாலை 3.55 மணிக்கு நடந்துள்ளது. பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் பாகிஸ்தானின் லெக்ரி கலான் கிராமத்தைச் சேர்ந்தவர்.
இது குறித்து எல்லை பாதுகாப்பு படை தரப்பில் கூறப்படுகையில், “தொடர்ந்து அவருக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் அவர் ஊடுருவலை நிறுத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.