ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாத அமைப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகிறது. இதையடுத்து, எல்லையோர பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் பதுங்கு குழிக்குள் சென்று ஒளிந்துகொண்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.45 மணிவரை நீடித்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் எந்த சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என இந்திய ராணுவத்தினர் தெரிவித்தனர்.