இஸ்லாமாபாத்: சீன நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கையை வெளியிடும்போது, இம்ரான் கான் அடுத்த மாதத் தொடக்கத்தில் சீனா செல்ல திட்டமிட்டுள்ளதாக காலித் மன்சூர் அறிவித்திருந்தார்.
இந்தப் பயணத்தில் சி.பி.இ.சி. (CPEC) திட்டத்தின்கீழ் உள்ள பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது, இருதரப்பு பேச்சுவார்த்தை, இன்னும் சில விஷயங்கள் குறித்து சீனாவுடன் ஆலோசிப்பார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஜின்ஜியாங்-குவாதர் இணைப்பு
ஏ.பி.சி.இ.ஏ.வின் (APCEA) வருடாந்திர நிலையான வளர்ச்சி அறிக்கை 2021, பாகிஸ்தான்-சீனா நிறுவனம், அனைத்து பாகிஸ்தான் சீனா நிறுவனக் கூட்டமைப்பினால் சீனத் தூதரகத்தில் வெளியிடப்பட்டது.
இதில், சி.பி.இ.சி. (CPEC) ’சீனா-பாகிஸ்தான் பொருளாதாரத் தளத்தின்’ தலைவரான மன்சூர், ”பிரதமர் சீனா பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலீட்டாளர்களுக்கு உள்ள இடையூறுகளைச் சரிசெய்யவும் வகையில் இது அமையும்” எனத் தெரிவித்தார்.
சி.பி.இ.சி. திட்டத்தின் செயல்பாடுகளை 15 நாள்களுக்கு ஒருமுறை பிரதமர் விளக்குவார் என்று மன்சூர் கூறியுள்ளார். சீனாவின் வளமிக்க ஜின்ஜியாங் மாகாணத்தையும், பாகிஸ்தானின் பலோசிஸ்தானில் இருக்கும் குவாதர் துறைமுகத்தையும் இணைக்கும் முதன்மையான திட்டம் மல்டி பில்லியின் பெல்ட் (Multi billion belt), சாலை தொடக்கம்.
இது சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் முக்கியத் திட்டமாகும். இத்திட்டத்தின் அமெரிக்க டாலர் மதிப்பு சுமார் 60 பில்லியன் ஆகும். மேலும், சீனாவின் முதலீட்டில் உள்கட்டமைப்பை வைத்து சீனாவின் உலகளாவிய தாக்கத்தை நிறுவவும் இது உதவும்.
இம்ரானின் பயணம் பிணைப்பைப் பலப்படுத்தும்
மேலும், இம்ரான் கான் பிப்ரவரி மாதம் சீனா செல்ல இருப்பது இருதரப்பு நாடுகளின் பிணைப்பைப் பலப்படுத்தும் என்றும் கூறினார்.
சீனத் தூதுவர் நோங் ரோங், சி.பி.இ.சி.யின்கீழ் உள்ள சீன முதலீடுகளைச் சுட்டிக்காட்டினார். சீனா, சி.பி.இ.சி. திட்டத்தில் பாகிஸ்தானில் அமெரிக்க டாலர் கணக்குப்படி சுமார், ரூ.25 பில்லியின் முதலீடு செய்துள்ளது. இதில் 75,000 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும், 500 கிமீ பரப்பளவுக்கு சாலைகளும் நெடுஞ்சாலைகளும் கட்டமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நோய்த் தொற்றுக் காலங்களில் இரு நாட்டின் ஒற்றுமை
மேலும், ”கடந்த ஆண்டு, சீனாவும் பாகிஸ்தானும் இரு நாட்டின் நட்பைக் கொண்டாடும் வகையில், 70ஆவது ஆண்டு ராஜதந்திர உறவாகக் கொண்டாடின. இருதரப்பும் உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவல் நேரங்களில் ஒன்றுக்கொன்று துணைநின்றன. மேலும், சி.பி.இ.சி.யின் வளர்ச்சிக்கும் இருதரப்பும் உதவிக்கொண்டன” எனவும் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் செனத் தலைவரான சாதிக் சஞ்சிராணி பேசுகையில், ”சி.பி.இ.சி. ஒரு கேம் சேஞ்சர் (Game changer). இது நிச்சயம் வர்த்தக இணைப்புகளையும், பொருளாதார வாய்ப்புகளையும் பகுதி முழுவதும் பெருகச் செய்யும்” எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் சீன நிறுவனங்களின் சிஇஒ-க்கள் உள்பட 100 பேர் கலந்துகொண்டனர். சீனாவும் பாகிஸ்தானும் என்றும் கூட்டாளிகளாக இருக்கவே விரும்புகின்றன. பாகிஸ்தானின் ஆயுத சாதனங்கள் வாங்குவதற்கு பெய்ஜிங்தான் முதன்மைத் தளமாகத் திகழ்கிறது. சீனாவும் பாகிஸ்தானின் மோசமாகிக் கொண்டிருக்கும் பொருளாதார நிலையைச் சரிசெய்ய உதவ சம்மதித்துள்ளது.