2017ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த 20 மீனவர்கள் தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் தண்டனைக்காலம் கடந்த வாரம் நிறைவடைந்தது.
இந்நிலையில், கைதான 20 மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் அவர்களை ஒப்படைத்தனர். மேலும், நல்லெண்ண அடிப்படையில் அவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்பட்டது.
அவர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்த இந்திய தூதரக அதிகாரிகள் பின்னர் தங்கள் ஊர்களுக்கு செல்ல அனுமதித்துள்ளனர். இவர்கள் விடுதலை ஆன நிலையில், இன்னும் 568 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர்.
இதையும் படிங்க: பாலத்திலிருந்து விழுந்த கார் - எம்.எல்.ஏ மகன் உள்ளிட்ட ஏழு மாணவர்கள் மரணம்