குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் பகுதியையும் பாகிஸ்தானின் சிந்து பகுதியையும் பிரிக்கும் சர் கிரிக் எனும் இடத்தில் நேற்று (டிச.19) எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குஜராத் கடற்கரை வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீனவரை அவரது படகில் வைத்து பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிந்து பிராந்தியத்தைச் சேர்ந்த காலித் உசேன் (35) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்த ஒரு மொபைல் போன், 20 லிட்டர் டீசல், இரண்டு வலைகள், எட்டு மூட்டை பிளாஸ்டிக் நூல்கள், சில நண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: '4 போரில் தோற்ற பிறகும் கொடிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்தவில்லை' - ராஜ்நாத் சிங் சாடல்