ETV Bharat / bharat

ஷிம்லிபால் சரணாலயம் காட்டுத் தீ: சுதர்சன் பட்நாயக் வருத்தம்! - ஷிம்லிபால் காட்டுத் தீ

புரி: ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் உள்ள ஷிம்லிபாலில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுதர்ஷன் பட்நாயக்
சுதர்ஷன் பட்நாயக்
author img

By

Published : Mar 6, 2021, 5:25 PM IST

காடுகளைக் காப்போம்

இயற்கை என்றவுடன் முதலில் நம் நினைவுக்கு வருவது காடு, மலை, கடல் சார்ந்த இடங்களாகும். அதில் ஒன்றான காட்டில் இன்றைய நாள்களில் பெரும்பாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது.

இக்காட்டுத் தீயால் காடுகளில் உள்ள பல்வேறு அரியவகை மரங்கள் அழிவதோடு மட்டுமல்லாமல், பல விலங்குகளும் இறக்கும் நிலை ஏற்படுகிறது.

மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக்

மணல் சிற்பக் கலைஞரின் வருத்தம்

இந்த நிலையில் ஒடிசாவின் ஷிம்லிபால் சரணாலயத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. இந்தக் காட்டுத் தீ மனத்திற்கு மிகவும் கவலை அளிக்கிறது என பத்மஸ்ரீ விருதுபெற்ற, மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஷிம்லிபாலில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பல மதிப்புள்ள மரங்கள் எரிந்து சாம்பலாவதோடு மட்டுமல்லாமல், பல விலங்குகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ஆகையால் காடுகளைப் பாதுகாப்பு அவசியம். அனைவரும் காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என வருத்தம் தெரிவித்தார் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

மேலும், ஷிம்பாலில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இரங்கல் தெரிவிக்கும்விதமாக, மணலில் காட்டின் பாதுகாப்பு குறித்து கலையை உருவாக்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.