மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா, அவரது மனைவி இருவருக்கும் கடந்த வாரம் கோவிட்-19 பாதிப்பு உறுதியானது. முதல் சில நாள்கள் வீட்டிலிருந்தபடியே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்றுவந்த இருவரும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”புத்ததேவ் பட்டாச்சாரியாவுக்கு BiPAP வசதியுடன் வீட்டிலிருந்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், அவரது உடல் நிலை மோசமடைந்து, ஆக்ஸிஜன் அளவு 90 விழுக்காட்டுக்கும்கீழ் சென்றதால், ரிஸ்க் எடுக்க வேண்டாம் என உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளது. 77 வயதான புத்ததேவ், மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக 2000ஆம் ஆண்டு தொடங்கி 2011ஆம் ஆண்டு வரை பொறுப்பிலிருந்துள்ளார்.
இதையும் படிங்க: கருப்பு, வெள்ளையை விட ஆபத்தாம் மஞ்சள் பூஞ்சை... தடுப்பது எப்படி?