டெல்லி: தலைநகரான டெல்லி, கடந்த இரண்டு வாரங்களாக புகையால் சூழப்பட்டு, காற்று மாசுபாடு அதிகரித்து மிக மோசமான நிலையை அடைந்து காணப்பட்டது. காற்றின் தரக்குறியீடு 450க்கும் மேல் சென்று அபாயகரமான சூழல் ஏற்பட்டது. இதனால் காற்றின் மாசுபாடை கட்டுக்குள் கொண்டு வர உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வந்தது.
-
#WATCH | Delhi witnesses sudden change in weather, receives light rain
— ANI (@ANI) November 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
(Visuals from Kartavya Path) pic.twitter.com/YeGPH70uAD
">#WATCH | Delhi witnesses sudden change in weather, receives light rain
— ANI (@ANI) November 10, 2023
(Visuals from Kartavya Path) pic.twitter.com/YeGPH70uAD#WATCH | Delhi witnesses sudden change in weather, receives light rain
— ANI (@ANI) November 10, 2023
(Visuals from Kartavya Path) pic.twitter.com/YeGPH70uAD
பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும், பல்வேறு வகையில் போக்குவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ஏற்பாடு செய்தது. மேலும், பொதுமக்கள் வெளியில் அதிக நேரம் இருக்க வேண்டாம் என வலியுறுத்தியது. இந்நிலையில், இன்று (நவ.10) காலை டெல்லியில் லேசான மழை பெய்தது. இதனால் புகையால் சூழப்பட்டிருந்த டெல்லி தெளிவாக காட்சியளித்தது.
இன்று காலை 7 மணியளவில் காற்றின் தரக்குறியீடு என் 437-லிருந்து கனிசமாக குறைந்து 408 அளவை எட்டியுள்ளது. மேலும், மழை பெய்தால் இன்னும் காற்றின் தரக்குறையீடு குறையும் என கூறப்படுகிறது. முன்னதாக, தீபாவளி நெருங்கும் நாட்களில் மழை பெய்து காற்றின் தரம் சற்று உயர்ந்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டிசிஷன் சப்போர்ட் சிஸ்டத்தின் தரவுகளின்படி, டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் வயல்வெளியில் ஏற்பட்ட தீ காரணமாக கடந்த புதன்கிழமை டெல்லியில் 38 சதவீதமும், நேற்று 33 சதவீதமும் காற்று மாசு ஏற்பட்டது என கூறியுள்ளனர்.
டெல்லியின் மாசுபாட்டிற்கு முக்கிய காரணியாக 12 சதவீதம் முதம் 14 சதவீதம் போக்குவரத்து உள்ளது. இதனால் டெல்லி அரசு போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில், ஆட்-ஈவன் விதியை நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது. மேலும், காற்று மாசுபாட்டைக் குறைக்க செயற்கை மழை கொண்டு வருவதற்கு நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் திட்டமிட்டுள்ளனர்.
பிராந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்லி, சோஹானா, ரேவாரி, அவுரங்காபாத், ஹரியானா, பீஜ்நாவுர், சகோடி, மீரட், டண்டா, ஹஸ்தினாபுர், சந்த்பூர், தவுராலா, மோடிநகர், கிதோர், அம்ரோஹா ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் மேலும் காற்று மாசுபாடு குறைந்து சுத்தமான காற்று சூழல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 1 முதல் 15ஆம் தேதி வரை டெல்லியில் காற்று மாசுபாடு மோசாமான நிலையில்தான் இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இன்று காலை பெய்த லேசான மழையால் வாகன ஓட்டிகள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் வரும்போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புத்துயிர் பெறுகிறதா விடுதலை புலிகள் இயக்கம்? இலங்கைக்கு மத்திய அரசு எச்சரிக்கை!