லக்னோ : உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டவிரோத செயல்கள் மற்றும் மதமாற்றத்துக்கு வெளிநாடுகளிலிருந்து ரூ.27.30 கோடி பணம் கிடைத்துள்ளதாக பயங்கரவாத எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணம் ஏழைகள், ஆதரவற்றவர்கள் மற்றும் நலிவுற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக அறக்கட்டளை என்ற பெயரில் திரட்டப்பட்டாலும் பல்வேறு தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட கலவரக்காரர்களுக்கு ரூ.59.94 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் கைது செய்யப்பட்ட சலாவுதீன் என்ற ஜைனுதீன் ஷேக்கின் அமைப்பான அமெரிக்கன் இந்தியன் ஒரிஜினின் அமெரிக்க கூட்டமைப்பு (AFMI)க்கும் பணம் கிடைத்துள்ளது.
இந்த அமைப்புக்கு துபாய் உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 27.30 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில் ரூ.19.30 கோடி நிறுவனத்தின் கணக்கில் வழியாகவும், ரூ.8 கோடி ஹவாலா வழி வழியாக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு உத்தரப் பிரதேசத்தில் உள்ள மற்றொரு அமைப்புக்கும் நிதியுதவி செய்துள்ளது. இதனை பயங்கரவாத எதிர்ப்பு குழு ஐஜி ஜி.கே.கோஸ்வாமி தெரிவித்தார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட உமர் கௌதம் மற்றும் சலாவுதீன் ஆகிய இருவரும் லக்னோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இவர்கள் இருவர் உள்பட ஆறு பேர் மீது குற்ற பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்து மதத்திற்கு மாறிய இஸ்லாமியருக்கு கொலை மிரட்டல்!