ETV Bharat / bharat

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து - மாணவர்கள் காயம்! - பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்து 12 மாணவர்கள் காயம்

ராஜஸ்தான் மாநிலம் பினாகேர் மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

school students
பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 2:17 PM IST

ராஜஸ்தான் மாநிலம் பினாகேர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) காலையில் பஜ்ஜு என்ற பகுதியில் தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 40 பள்ளி மாணவர்கள் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், பஜ்ஜு பகுதியில் உள்ள கால்வாய் அருகே சென்றபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பஜ்ஜு காவல்நிலைய போலீசார் பொதுமக்கள் உதவியுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது, "பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்குள்ளான தனியார் பேருந்தில் 40 மாணவர்கள் இருந்தனர். அதில், 12-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். அவர்களுக்கு பஜ்ஜூவில் உள்ள பொது சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவர்கள் தற்போது நலமுடன் இருக்கின்றனர்.

பேருந்து அதிவேகமாக சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால், சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய பிறகே விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாக தெரிய வரும்" என்றனர்.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மணிப்பூர் மாநிலம் நானி மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. தனியார் பள்ளி மாணவிகள் கல்விச் சுற்றுலா சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. பேருந்து லாங்சாய் மலைப்பகுதி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர்.

இதையும் படிங்க: நேபாளில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து; 8 பேர் உயிரிழப்பு - மீட்புப்பணிகள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.