புவனேஸ்வர்: ஒடிசாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வினாடிக்கு சுமார் 10 லட்சம் கனஅடி தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. இதன் காரணமாக 12 மாவட்டங்களில் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை 54 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பூரி, குர்தா மாவட்டங்களின் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மொத்தமாக 425 கிராமங்கள், 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2.26 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளில் மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழு உடன் காவல் துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அங்குல், பர்கர், பௌத், கட்டாக், ஜகத்சிங்பூர், ஜாஜ்பூர், கேந்திரபாரா, குர்தா, நாயகர், பூரி, சம்பல்பூர் மற்றும் சுபர்னாபூர் ஆகிய மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சீனாவில் ஒரே இரவில் பேய்மழை... 16 பேர் உயிரிழப்பு... 36 பேர் மாயம்...