ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளதால், வன்முறை சம்பவம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக அங்கு வசிக்கும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் தேவைப்பட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவதற்கு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், ஆப்கானில் இந்துக்கள், சீக்கியர்களின் பாதுகாப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (ஆக.12) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "போர் சூழ்ந்துள்ள ஆப்கானில் இந்துக்கள், சீக்கியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும்.
கடந்த ஆண்டு மட்டும் இந்துக்கள், சீக்கய சமூகத்தினர் 383 பேர் இந்தியா மீட்டுக் கொண்டுவரப்பட்டனர். காபூலில் உள்ள தூதரகத்தில் இந்தியா தொடர்ந்து தொடர்பில் உள்ளது. எனவே ஆப்கானில் சிறுபான்மையினர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கஜினி பிராந்தியத்தை கைப்பற்றிய தலிபான்