மேற்குவங்க மாநிலத்தில் அரசாங்க திட்டங்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்க ஏதுவாக 3 ஆயிரத்து 437 பங்களா சஹயோக் கேந்திரங்கள் (பிஎஸ்கே) அம்மாநில அரசு சார்பாக தொடங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “அரசாங்க திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில், இந்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களின் சீரான செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, கொல்கத்தாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 36 ஆயிரத்து 246 பேர் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை 7 ஆயிரத்து 68 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.