ஹூப்ளி: நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில் விஜயநகரத்தைச் சேர்ந்த ராகவேந்நிரா முட்டாலிக் தேசாய் என்பவர் குடும்பம் 2 லட்சத்துக்கும் அதிகமான கையால் தைக்கப்பட்ட முகக்கவசங்களை மக்களுக்கு ரூ.8 முதல் ரூ.10 விலையில் வழங்கி வருகின்றது.
முகக்கவசங்களை மலிவு விலையில் விற்கும் தேசாய், அதுகுறித்து கூறுகையில், "கரோனா இரண்டாவது அலை காரணமாக காதி முகக்கவசங்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களிலும் காதி முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றார்.
இந்த முகக்கவசங்கள் மக்கள் உயிரைக் காப்பாற்றுவதிலும், அதே நேரத்தில் தனது குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் நான் மகிழ்கிறேன் என்றார்.
தொடர்ந்து முகக்கவசங்களின் தரத்தின் அடிப்படையில் விலை சார்ந்துள்ளது என்றும் சந்தையில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஒரே மாதிரியாக முகக்கவசம் ஒன்றிற்கு ரூ.35 முதல் ரூ.40 வரை வசூலிக்கின்றன. அவர்களின் முகக்கவசங்களை மருத்துவர்கள் பயன்படுத்தலாம்.
இந்த காதி முகக்கவசங்கள் ரயில்வே துறை ஊழியர்கள், காவல் துறை ஊழியர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
எனது மனைவியும், இரண்டு குழந்தைகளும் காதி முகக்கவசங்களை தயாரிப்பதில் ஈடுபாட்டுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.