புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் வரும் 25ஆம் தேதி வரை 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் பள்ளி குழந்தைகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையும் பரிந்துரைத்தது.
அதனடிப்படையில் முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தி , காய்ச்சல் பரவல் தீவிரம் அடையாமல் இருக்க வரும் 25ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் 26ஆம் தேதி தொடங்கும் காலாண்டு தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என்றும் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 56 இஞ்ச் மோடி ஜீ சாப்பாடு - 40 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.8.5 லட்சம் பரிசு