ETV Bharat / bharat

கூட இருந்தவர்களே குழி பறித்துவிட்டார்கள் - உத்தவ் தாக்ரே வேதனை

கூட இருந்தவர்கள் சிவசேனாவிற்கு துரோகமிழைத்து விட்டார்கள் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். எம்எல்ஏக்களை மட்டுமே பாஜக வாங்க முடியும் என்றும், அவர்களை தேர்ந்தெடுத்த மக்களை முடிந்தால் எங்களிடம் இருந்து பிரித்துப் பாருங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

உத்தவ் தாக்ரே
உத்தவ் தாக்ரே
author img

By

Published : Jun 25, 2022, 11:01 AM IST

மும்பை: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்ரே நேற்று (ஜூன் 24) இரவு காணொலி காட்சி மூலமாக சிவசேனா தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது, "சிவசேனா தொண்டர்கள்தான் எனது சொத்து, அவர்கள் என்னுடன் இருக்கும்வரை எந்த விமர்சனத்தையும் கண்டுகொள்ள மாட்டேன். கூடவே இருந்தவர்கள் சிவசேனாவிற்கு துரோகமிழைத்துவிட்டார்கள்.

உங்களில் (தொண்டர்கள்) பலர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் இருந்தும் நாம் அவர்களுக்கு (அதிருப்தி எம்எல்ஏக்கள்) வாய்ப்பளித்தோம். உங்களின் கடின உழைப்பால் வெற்றிபெற்ற பிறகு இவர்கள் தற்போது அதிருப்தியாளர்களாக மாறியுள்ளனர். மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் நீங்கள் கட்சிக்கு ஆதரவாக நிற்கிறீர்கள். எப்படி உங்களுக்கு நன்றி சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.

பாஜக கூட்டணிக்கு அழுத்தம்: கூட்டணி கட்சிகள் மீதான புகார்கள் குறித்து ஆலோசிப்போம் என ஏக்நாத் ஷிண்டேவிடம் நான் கூறினேன். அதற்கு, பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக என்னிடம் தெரிவித்தார். அவர்களை என்னை சந்திக்க அழைத்து வாருங்கள், அவர்களிடம் ஆலோசிக்கிறேன் என கூறினேன். ஏனென்றால், பாஜக நம்மை மிகவும் மோசமாக நடத்தினர். அவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை.

எது நட்புறவு?: அதிருப்தியாளர்கள் பலரின் மீதும் பல்வேறு புகார்கள் உள்ளன. எனவே, பாஜக உடன் சென்றால் அனைத்து புகார்களும் போய்விடும் என்பதாலும் நம்மோடு இருந்தால் சிறைக்கு போய்விடுவார்கள் என்பதாலும்தான் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதுதான் நட்புறவு என்பதா?.

நானே கொடுத்திருப்பேனே...: ஒரு சிவசேனா தொண்டன் முதலமைச்சர் ஆக போகிறார் என்றால் நீங்கள் அவர்களுடன் (பாஜக) போகலாம். ஆனால், வெறும் துணை முதலமைச்சர் பதவிக்குதான் என்றால், என்னிடமே சொல்லியிருக்கலாம். நான் உங்களை (ஏக்நாத்) துணை முதலமைச்சர் ஆக்கியிருப்பேன்.

பாஜக அப்படித்தான்: சிவசேனா என்பது சித்தாந்தம். இந்துகளின் வாக்கு வங்கியை பகிர்ந்துகொள்ள கூடாது என்பதற்காக பாஜக அதை அழிக்க நினைக்கிறது. மேலும், இந்து வாக்கினை பிரிக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்குதான் பால் தாக்ரேவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவுடன் போவதை தவிர அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர்கள் புதிதாக ஆட்சியமைத்தாலும் நீண்ட நாள்களுக்கு தாக்குப்பிடிக்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுடன் இருக்கும் பல எம்எல்ஏக்கள் விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர். அதிருப்தியாளர்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது" என்றார்.

முடிந்தால் பிரித்து பாருங்கள்: மேலும், ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆகியோரை நோக்கி, "எம்எல்ஏக்களை உங்களால் வாங்க முடியும், ஆனால் அவர்களை தேர்ந்தெடுத்த மக்களை முடிந்தால் எங்களிடம் இருந்து பிரித்துப் பாருங்கள்" என சவால் விட்டுள்ளார். மேலும்,"யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து வெளியேறிக்கொள்ளலாம். நான் புதிய சிவசேனாவை உருவாக்க உள்ளேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நிர்வாகிகளுடன் உரையாடிய உத்தவ் தாக்கரே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.