தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பதன்சேருவில் வறண்ட நிலப் பகுதிக்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (இக்ரிசாட்) 50ஆவது ஆண்டு விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
இக்ரிசாட்டின் தாவரப் பாதுகாப்பு குறித்தப் பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையம், இக்ரிசாட்டின் துரித உற்பத்திக்கான நவீன மையம் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த இரண்டு மையங்களையும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க சஹாராவின் சிறு விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "நீர் மற்றும் நில நிர்வாகம், பயிர்வகையில் மேம்பாடு, பலவகை வேளாண் கருவிகள் மற்றும் கால்நடை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இக்ரிசாட் பங்களிப்பு அளப்பறியது. இந்த அமைப்பின் ஆராய்ச்சியும், தொழில்நுட்பமும் வேளாண்மையை எளிதாக்கவும், நீடித்ததாக்கவும் மாற்ற உதவி செய்துள்ளன.
பருவநிலை மாற்றத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவோர் குறைந்தபட்ச ஆதார வளங்களுடன் வளர்ச்சியின் கடைசி நிலையில் இருக்கும் மக்கள்தான். எனவே, பருவநிலை மாற்றத்திற்கு சிறப்பு கவனம் செலுத்துவது உலகிற்கு அவசியம்.
பருவநிலை மாற்றத்திலிருந்து தனது விவசாயிகளைப் பாதுகாக்க மீண்டும் தொன்மையான அடிப்படை செயல்களை நமது எதிர்காலத்திற்குப் பயணத்தில் இணைக்கும் நடவடிக்கையில் இந்தியாவின் கவனம் இருக்கிறது. அரசின் கவனம் என்பது 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ள சிறு விவசாயிகளின் மீது இருக்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க இந்தியாவின் முயற்சிகள் பெருமளவு அதிகரித்து வருகிறது.மக்கள் தொகையில் பெரும் பகுதியை வறுமையிலிருந்து வெளியேற்றி சிறந்த வாழ்க்கை முறைக்கு அவர்களைக் கொண்டு செல்ல விவசாயம் ஆற்றல் மிக்கதாக விளங்குகிறது.
இந்தியாவின் இலக்கு வெறுமனே உணவுத் தானிய உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்ல, உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து பாதுகாப்பிலும் நாம் கவனம் செலுத்துகிறோம். இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன் கடந்த ஏழு ஆண்டுகளில் பல செறிவூட்டப்பட்ட ரகங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம்" என பேசினார்.
இதையும் படிங்க: வீடியோ: கொல்கத்தாவில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்து