ETV Bharat / bharat

Odisha train accident: "எங்கள் கடமை இன்னும் முடியவில்லை; ஒரு வேலை மீதி இருக்கிறது" - அஸ்வினி வைஷ்ணவ்! - எங்கள் பொறுப்பு இன்னும் முடியவில்லை

ஒடிசாவில் விபத்து ஏற்பட்ட இடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கிய நிலையில் தங்கள் கடமை இன்னும் முடியவில்லை என்றும், சிகிச்சை பெறுவோரை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கும் பொறுப்பு உள்ளது எனவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அஸ்வினி வைஷ்ணவ்
Ashwini Vaishnav
author img

By

Published : Jun 5, 2023, 5:26 PM IST

பாலசோர் (ஒடிசா): ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த பிறகு, சேதம் அடைந்த ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து, 51 மணி நேரத்துக்கு பிறகு விபத்து நடந்த இடம் வழியாக மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. முதற்கட்டமாக அந்த மார்க்கத்தில் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. இதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி உத்தரவை தொடர்ந்து, சேதம் அடைந்த ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. சேதம் அடைந்த 2 தண்டவாளங்கள் மறுசீரமைக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது. 51 மணி நேரத்துக்கு பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

இத்துடன் எங்கள் கடமை முடியவில்லை. இந்த விபத்தில் பலர் குடும்பத்தில் இருந்து பிரிந்து விட்டனர். காணாமல் போன அவர்களை கண்டுபிடித்து, மீண்டும் குடும்பத்திடம் சேர்க்க வேண்டிய பொறுப்பு உள்ளது. தற்போது அந்த பணியில் தான் கவனம் செலுத்தி வருகிறோம்" என கூறினார்.

மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே வந்த போது சிக்னல் பிரச்னையால், அருகே நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. சிதறிய ரயில் பெட்டிகள் மீது எதிரே வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயில் மோதியது. இந்த கோர விபத்தில் 275 பேர் பலியான நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த பின், ரயில் பாதையை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 7 பொக்லைன், கிரேன்கள், 2 விபத்து மீட்பு ரயில்கள் ஆகியவையும் சீரமைப்பு பணியில் களம் இறக்கப்பட்டன.

பணிகள் முடிவடைந்த பின், சீரமைக்கப்பட்ட ரயில் பாதையில் நேற்றிரவு சரக்கு ரயில் இயக்கப்பட்டது. இன்று அந்த வழியாக குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: ஒடிசா ரயில் விபத்து: பாலசோர் வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.