டெல்லியில் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதீத அனல் காற்று வீசிவருகிறது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று (ஏப்ரல் 10) டெல்லிக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை நிலவுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஏப். 9) 42.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்த வெப்பநிலை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 17 தேதி பதிவான 43.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை விட அதிகம்.
குறிப்பாக டெல்லியில் 1941ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி அன்று அதிகபட்ச வெப்பநிலையாக 45.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. இந்த வெப்பநிலை சாதரண வெப்பநிலை அளவை விட பத்து மடங்கு அதிகம்.
இதையும் படிங்க:தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு