அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு நேற்று (ஜனவரி 22) பயணம் மேற்கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். அவருடன் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகமதாபாத்தில் கணர்வாதி தமிழ்ச்சங்கம் சார்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.
-
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கர்ணாவதி தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற 6-ஆம் ஆண்டு தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு மக்களின் அன்பைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி! pic.twitter.com/2orwUTes8d
— O Panneerselvam (@OfficeOfOPS) January 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கர்ணாவதி தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற 6-ஆம் ஆண்டு தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு மக்களின் அன்பைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி! pic.twitter.com/2orwUTes8d
— O Panneerselvam (@OfficeOfOPS) January 22, 2023குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கர்ணாவதி தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற 6-ஆம் ஆண்டு தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு மக்களின் அன்பைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி! pic.twitter.com/2orwUTes8d
— O Panneerselvam (@OfficeOfOPS) January 22, 2023
இந்த விழாவை தொடங்கி வைக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், ஓபிஎஸ் அகமதாபாத் சென்று விழாவை தொடங்கி வைத்தார். இதுகுறித்து ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கர்ணாவதி தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற 6-ஆம் ஆண்டு தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு மக்களின் அன்பைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி எனப் பதிவிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் சமீபகால நடவடிக்கைகள், பாஜக தனக்கு பக்கபலமாக இருப்பதாக சுட்டுக்காட்டும் வகையிலேயே இருக்கின்றன. அண்மையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாகவே தெரிவித்திருந்தார். அதோடு, குஜராத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு ஓபிஎஸ் நேரடியாக சென்றுவருகிறார். குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழா, பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் இறுதி சடங்குகளில் அதிமுக சார்பாக ஓபிஎஸ் மட்டுமே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிப்பு