ETV Bharat / bharat

ராகுல் காந்தியின் பதவி பறிப்பு.. எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்.. - ராகுல் காந்தி கைது வழக்கு

ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
author img

By

Published : Mar 24, 2023, 5:02 PM IST

சென்னை: ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், " மோடி அரசு, ராகுல் காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் கண்டு அச்சப்படுகிறது.

ஜனநாயகத்தைக் கொன்று, ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து, உண்மையைப் பேசுபவர்களின் வாயை அடைக்க நினைக்கிறது. இந்த சர்வாதிகாரத்தை நாட்டு மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். ஜனநாயகத்தை காக்க சிறைக்கு கூட செல்வோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

  • मोदी सरकार को सबसे ज़्यादा डर श्री @RahulGandhi व कांग्रेस पार्टी से लगता है।

    लोकतंत्र की हत्या करने लिए उन्होंने श्री गाँधी की संसद सदस्यता रद्द की है।वो सच बोलने वालों का मुँह बंद करना चाहते हैं।

    देशवासी ये तानाशाही नहीं सहेंगे।
    लोकतंत्र की हिफ़ाज़त के लिए हम जेल तक जाएँगे। pic.twitter.com/bxvwwJik5U

    — Mallikarjun Kharge (@kharge) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். அவர் மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதலாகும். எனக் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் முக்கிய இலக்காக மாறி உள்ளனர்.

ஒருபக்கம் கிரிமினல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுகின்றனர். மறுபக்கம் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது சுதந்திர கருத்துகளை கூற தகுதியற்றவர்களாக கட்டமைக்கப் படுகின்றனர். ஜனநாயகத்தில் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

  • In PM Modi’s New India, Opposition leaders have become the prime target of BJP!

    While BJP leaders with criminal antecedents are inducted into the cabinet, Opposition leaders are disqualified for their speeches.

    Today, we have witnessed a new low for our constitutional democracy

    — Mamata Banerjee (@MamataOfficial) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் என்பது மக்களவையில் எதிர்கட்சிகளின் வாயை அடைக்க நினைக்கும் பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையாகும். நம்முடைய குரல்கள் வலிமையாக மாறும். ஜனநாயக கொள்கைகளை மதிக்காத சக்திகளுக்கு எதிரான நமது ஒற்றுமை மேலும் வலுவடையும். நாங்கள் அவருடன் நிற்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

கனிமொழி ட்வீட்
கனிமொழி ட்வீட்

அதே போல திமுக அமைச்சரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும், அவரை எம்பி பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ட்வீட்
உதயநிதி ட்வீட்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசினார் என்று குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில், விசாரணை என்ற பெயரில் போலி நாடகம் நடத்தி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியைக் குழிதோண்டிப் புதைத்த செயலாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.