ETV Bharat / bharat

குடியரசுத்தலைவர் தேர்தல்... மம்தா கடிதம்... குழப்பத்தில் எதிர்க்கட்சிகள்!

குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த மம்தா பானர்ஜி 22 கட்சித் தலைவர்களுக்கு மம்தா கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தல்
author img

By

Published : Jun 13, 2022, 6:20 PM IST

டெல்லி: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது.

குடியரசுத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள எம்.பி.க்கள், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கலாம்.

இந்தநிலையில் பாஜக சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக யாரை அறிவிப்பார்கள் என்றும்; அதேவேளையில் எதிர்க்கட்சியினர் யாரை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மார்க்சிஸ்ட் விமர்சனம் : இந்தநிலையில் குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த ஜூன் 15ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க கூறி, திமுக உள்ளிட்ட 22 கட்சித்தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். இதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஏற்கெனவே குடியரசுத்தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவை நியமித்துள்ளனர். அவரும் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், மம்தாவின் கடிதம் எதிர்க்கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய சூழலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை உள்ளது. அவ்வாறு இருக்கையில் மம்தாவின் கடிதம் ஒருதலைபட்சமாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம் செய்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி கூறுகையில், "ஜூன் 15 அன்று ஒரு கூட்டம் முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்தது. சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவிடம் பொறுப்பை ஒப்படைத்து, மற்ற அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மம்தா பானர்ஜி யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் கூட்டத்தை கூட்டியுள்ளார். இது ஒருதலைப்பட்சமாக உள்ளது. மம்தாவின் செயல் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாமல் இருக்க, பாஜகவுக்கு உதவும் முயற்சியாக உள்ளது" என்று விமர்சனம் செய்தார்.

எந்ததெந்த மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை?:மாநில கட்சிகளைப் பொறுத்தவரையில், பலர் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. மம்தா அழைப்பு விடுத்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மத்திய குழு உறுப்பினர் சுப்ரியோ பட்டாச்சார்யா பேசுகையில், "இந்த விவகாரத்தில் நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. கட்சியில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்திடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு எடுக்கப்படும்" என்றார்.

இதேபோல் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கலாம் என்றும் அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் நிலைப்பாடு: "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சியாக உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் நாங்கள் அது பற்றி ஆலோசிக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு இல்லை" என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,"மம்தா யாரிடமும் கலந்தாலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்துள்ளார். கூட்டத்திற்கு காங்கிரஸ் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளர் இருக்க வேண்டும்"என்று தெரிவித்தார்.

இவ்வாறு எதிர்க்கட்சிகளிடையே பல்வேறு கருத்துகள் உள்ள நிலையில் ஜூன் 15ஆம் தேதி கூட்டத்தில் யார் எல்லாம் பங்கேற்பார்கள், என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு சம்மன் விவகாரம் - அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் நாளை நாடு தழுவிய போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.