இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகள் சார்பாக பொதுவேட்பாளரை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட சரத் பவார் மறுத்துவிட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக மம்தா தெரிவித்தார்.
பொது வேட்பாளர் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு இன்று(ஜூன் 15) எதிர்க்கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காளத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
17 எதிர்க்கட்சிகளின் சார்பாக அந்தந்த கட்சிகளின் முக்கியப்பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திமுக, காங்கிரஸ், சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கு பெற்றன. டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தெலங்கானா ராஷ்டிரியா சமிதி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் சார்பாக யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆம் ஆத்மி வேட்பாளர் தேர்வானதும் இது குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஹெச்.டி. தேவகவுடா மற்றும் அவரது மகனும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான ஹெச்.டி. குமாரசுவாமியும் கலந்துகொண்டனர். ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக மெகாபூபா முஃப்தி கலந்து கொண்டார்.
இதையும் படிங்க:குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகள் கூட்டம் - திமுகவின் டி.ஆர்.பாலு பங்கேற்பு!