டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று (டிசம்பர் 19) மாநிலங்களவை தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீன எல்லை விவகாரம் குறித்தும், அருணாச்சல பிரசேத மோதல் குறித்தும் விவாதிக்க அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை அவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான ஜக்தீப் தன்கர் நிராகரித்தார். இதனால் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் உள்ள தவாங்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே டிசம்பர் 9ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.
அதேபோல சீன ராணுவ வீரர்களும் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனிடையே எதிர்க்கட்சிகள் சீனா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிப்பதாகவும், மத்திய அரசு உண்மையை மறைப்பதாகவும் குற்றம்சாட்டின. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சீனா முழு வீச்சில் போருக்கு தயாராகி வருகிறது. ஆனால், மத்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று விமர்சனம் செய்திருந்தார்.
இதையும் படிங்க: பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு ராணுவ வீரர்கள் செய்த உதவி