டெல்லி : நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் உரையாற்றிய நிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 3வது நாள் விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது இரட்டை இலக்க பணவீக்கம், ஊழல், கொள்கை முடக்கம், நிலைத்தன்மையற்ற சூழல், வேலையின்மை, வன்முறை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றின் உத்தரவாதமாகும் என்றும் அதேநேரம் எனது மூன்றாவது பதவிக் காலத்தில் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்பது உத்தரவாதம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வெளியே சென்றவர்களிடம் மட்டும் கேளுங்கள் கச்சத்தீவு என்றால் என்ன? மற்றும் அது எங்கே அமைந்துள்ளது? என்று. திமுக அரசின் முதலமைச்சர் எனக்கு கடிதம் எழுதுகிறார், மோடி ஜி கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள் என்று. அது ஒரு தீவு ஆனால் அதை வேறு நாட்டுக்கு கொடுத்தது யார்? அது மா பாரதியின் ஒரு பகுதியாக இல்லையா என்றும் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது உங்கள் இந்திரா காந்தியின் தலைமையில் நடந்தது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
-
#WATCH | Opposition MPs walk out of the Lok Sabha as Prime Minister Narendra Modi speaks on #NoConfidenceMotion pic.twitter.com/2kYKRBiP1Z
— ANI (@ANI) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Opposition MPs walk out of the Lok Sabha as Prime Minister Narendra Modi speaks on #NoConfidenceMotion pic.twitter.com/2kYKRBiP1Z
— ANI (@ANI) August 10, 2023#WATCH | Opposition MPs walk out of the Lok Sabha as Prime Minister Narendra Modi speaks on #NoConfidenceMotion pic.twitter.com/2kYKRBiP1Z
— ANI (@ANI) August 10, 2023
கடந்த 1966ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி, மிசோரமில் ஆதரவற்ற பொது மக்கள் மீது காங்கிரஸ் அரசு விமானப் படை தாக்குதல் நடத்தியது. சொந்த நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தியது வேறு நாட்டின் விமானப் படையா என்பது குறித்து காங்கிரஸ் கட்சி பதில் சொல்ல வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மிசோரம் மக்கள் என் நாட்டின் குடிமக்கள் இல்லையா என்றும் அவர்களின் பாதுகாப்பு இந்திய அரசின் பொறுப்பல்லவா என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு தான் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வேலை கொடுத்ததாகவும் 2023 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள் என்று தற்போது அவர்கள் என் வார்த்தைகளை பின்பற்றி இருப்பதாக தெரிவித்தார்.
இருப்பினும் தான் வருத்தத்துடன் இருப்பதாகவும் 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகளிடம் எந்த தயாரிப்பும் இல்லை என்றும் அவர்கள் சிறப்பாக செய்து இருக்க வேண்டும் என்றார். 5 ஆண்டுகளுக்கு பின் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர்கள் புதுமையை கொண்டு வரவில்லை என்றும் மாறாக எந்த வித முயற்சியும் இன்றி அதே நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
அடுத்த 2028ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகளுக்கு இன்னொரு வாய்ப்பை தர விரும்புவதாகவும் ஆனால், 2028 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் போது எதிர்க்கட்சிகள் தயாராக வர வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க : "நாட்டின் எதிர்காலத்தில் அக்கறையில்லை.. சொந்த கட்சியின் வளர்ச்சியிலேயே விருப்பம்.." - பிரதமர் மோடி விளாசல்!