ETV Bharat / bharat

Opposition Meeting: பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்.. யார் யார் பங்கேற்பு?

author img

By

Published : Jul 17, 2023, 10:57 AM IST

திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 24 எதிர்கட்சிகள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம், கர்நாடக தலைநகர் பெங்களூருவில், இன்று (ஜூலை 17) மற்றும் நாளை( ஜூலை 18ஆம் தேதி) நடைபெற உள்ளது.

பெங்களூருவில் இன்று துவங்குகிறது எதிர்கட்சிகளின் ஒற்றுமைக் கூட்டம்!

பெங்களூரு: 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இன்று (ஜூலை 17ஆம் தேதி) துவங்கும் எதிர்கட்சிகளின் இரண்டாவது ஒற்றுமைக் கூட்டத்திற்கு, 24 கட்சிகளின் ஆதரவை, காங்கிரஸ் கட்சி ஒன்று திரட்டி உள்ளது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசுக்கு எதிராக, ஒரு பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, குறைந்தபட்சம் 24 எதிர்கட்சிகளின் தலைவர்கள், இன்று மற்றும் நாளை, பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் ஒன்றுகூட உள்ளனர்.

இந்த கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கண்காணிக்கும் பொறுப்பு, கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ஊடக பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர், திங்கட்கிழமை (ஜூலை 17ஆம் தேதி) காலை 11 மணிக்கு கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளனர். மேலும் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பிற்பகலில் கூட்டத்திற்கு வரத் துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சி நிரல்படி, மாலை 6 மணிக்கு ஒரு முறைசாரா கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு இரவு 8 மணிக்கு, இரவு விருந்து வழங்கப்பட உள்ளது. நாளை (ஜூலை 18ம் தேதி0 காலை 11 மணிக்கு துவங்கும் கூட்டம், மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான, பிரசார வியூகம் குறித்து அறிவிக்க ஏதுவாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சிகளின் முக்கிய பெரும் தலைவர்கள், இந்த பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் நிர்வாக சேவைகள் குறித்த மத்திய அரசின் அவசரச் சட்டம் குறித்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் அவசர சட்டத்தை மாற்றுவதற்கான மசோதா கொண்டு வரப்பட்டால் அதை எதிர்ப்போம் என்று காங்கிரஸ் கட்சி, தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ள நிலையில், எதிர்கட்சிகளின் பெங்களூரு கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி பங்கேற்க இருப்பதை உறுதி செய்து உள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் 23ஆம் தேதி பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் முதலாவது கூட்டத்தின் போது, மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே பிளவு ஏற்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு காலில் காயம் ஏற்பட்டு உள்ள போதிலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரில், பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்து உள்ளார்.

முன்னதாக நடைபெற்ற பாட்னா கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா (உத்தவ் தாக்ரே அணி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்),ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட் 16 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில், ராஷ்டிரிய லோக் தள கட்சி, பாட்னா கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டது. அக்கட்சி, பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏற்ப, தங்களுக்கு ஆதரவளித்து வரும் கட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக),, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர சோஷலிச கட்சி, கொங்கு தேச மக்கள் கட்சி, பார்வார்ட் பிளாக், இந்திய யுனியன் முஸ்லீம் லீக், கேரளா காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி), அப்னா தளம் (கமேரவாடி) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளுக்கு, காங்கிரஸ் கட்சி புதிதாக அழைப்பு விடுத்து உள்ளது.

கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்திற்கு, பிகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதீஷ் குமார் தலைமையேற்று நடத்தி இருந்த நிலையில், பெங்களூருவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு, காங்கிரஸ் தலைமையேற்று உள்ளதால், இந்த கூட்டம், பிரம்மாண்டமாக நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Yamuna water: மெல்ல குறைகிறது யமுனை நதியின் நீர்மட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.