ETV Bharat / bharat

பெகாசஸ் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தை நாடும் எதிர்கட்சிகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் செயல்பட அனுமதிக்கவில்லை என்று பாஜக எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றம் செல்ல உள்ளன.

பெகாசஸ் விவகாரம்
பெகாசஸ் விவகாரம்
author img

By

Published : Aug 1, 2021, 4:49 PM IST

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்த நிலையில், பெரும் அமளி ஏற்பட்டு வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, அரசு உரிய விசாரணை மேற்கொண்டு, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

பெகாசஸ் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு குறித்தான பிரச்னை. இதில் நியாமான விசாரணை கோரி எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் (இரு அவைகளும்) செயல்பட எதிர்கட்சிகள் அனுமதிக்கவில்லை என்றும், இதன் விளைவாக வரி செலுத்துவோரின் பணத்தில் 133 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதால் வரும் திங்கள் கிழமை (ஆகஸ்ட் 2) முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலையின்மை, கோவிட் பிரச்னை குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் அமளியால் மழைக்கால கூட்டத்தொடரில் 133 கோடி ரூபாய் இழப்பு’ - ஒன்றிய அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.