மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் (NCP) சரத்பவார் கூறும் போது, I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மூன்றாவது கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து 2024 மக்களவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் 28 கட்சிகள் பங்கேற்க உள்ளனர். ஆகஸ்ட்31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த I.N.D.I.A கூட்டணிக் கூட்டத்தில் 63 உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
82 வயதான NCP மேலாளர் செய்தியாளர் சந்திப்பில் கண்டிப்பாக மாற்று கூட்டணி அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கூறும் போது, நாட்டை காக்க அரசியல் கட்சிகள் ஒன்று இணைந்துள்ளது என தெரிவித்தார். மேலும் சரத்பவார் கூறும் போது, I.N.D.I.A கூட்டணியில் இணைய போவதில்லை என அறிவித்த பகுஜன் சமாஜ் கட்சி (BSP) தலைவர் பா.ஜ.கவுடன் தொடர்பில் உள்ளார்.
சிவசேனா நிறுவனர் மறைந்த பாலாசாகேப் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே, எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கும் முடிவு குறித்து நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். I.N.D.I.A கூட்டணி அடுத்த நகர்வின் போது மத்திய அரசாங்கத்திற்கு வாயு எற்பட்டு, எரிவாயு சிலிண்டரை இலவசமாக வழங்கும் என்று கிண்டல் செய்துள்ளார். மேலும் பிரதமர் பதவிக்கு I.N.D.I.A கூட்டணியில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என தெரிவித்தார்.
அசோக் சவான் கூறும் போது, I.N.D.I.A(இந்தியா) கூட்டணியில் 12 முதலமைச்சர்கள் உள்ளனர். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் பாஜக ஆட்சி உடைக்கப்படும் என தெரிவித்தார். சிவசேனா (UBT) தலைவர்கள் சஞ்சய் ராவத், ஆதித்யா தாக்கரே, NCP தலைவர்கள் சுப்ரியா சுலே, ஜெயந்த் பாட்டீல், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான், மகாராஷ்டிரா காங்கிரஸ் பிரதேச கமிட்டி தலைவர் நானா படோலே ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
I.N.D.I.A கூட்டணியின் முதல் கூட்டம் பீகாரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னெடுத்தார் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது இதில் 26 கட்சிகள் கலந்து கொண்டனர். தற்போது மூன்றாம் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ள மும்பை வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு விருந்து வழங்கி உத்தவ் தாக்கரே வரவேற்றார். மேலும் கூட்டம் கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "ஒரு கிளிக்கில் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000"- ராகுல் காந்தி பெருமிதம்!